உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சிவகங்கை பூக்கடை வியாபாரி கொலையில் கூலிப்படைக்கு பணம் கொடுத்தவர் கைது

சிவகங்கை பூக்கடை வியாபாரி கொலையில் கூலிப்படைக்கு பணம் கொடுத்தவர் கைது

சிவகங்கை: சிவகங்கை பூக்கடை வியாபாரி கொலையில் கூலிப்படைக்கு பணம் கொடுத்தவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.சிவகங்கை மேலவாணியங்குடியைச் சேர்ந்த முருகேசன் மகன் வெங்கடேஷ் 28. சிவகங்கையில் பூக்கடை வைத்திருந்தார். கடந்த 19ம் தேதி இரவு 8:30 மணிக்கு இவரது வீட்டின் அருகே மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. வெங்கடேஷ் மீது மதுரை மாவட்டம் திருப்பாலை போலீசில் கொலை முயற்சி வழக்கு நிலுவையில் உள்ளது. அதில் பாதிக்கப்பட்டவர்கள் இந்த கொலையில் ஈடுபட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை துவக்கினர்.திருப்பாலை போலீஸ் ஸ்டேஷனில் பதியப்பட்ட வழக்கில் பாதிக்கப்பட்ட ஒருவர் தற்போது வெளிநாட்டில் உள்ளார். அவர் மூலமாக ராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோவில் பூமிநாதன் மகன் ராஜதுரை 31 என்பவருக்கு பணம் பறிமாற்றம் நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. ராஜதுரை அந்த பணத்தின் மூலம் மதுரையை சேர்ந்த கூலிப்படைகளை ஏற்பாடு செய்து வெங்கடேைஷ கொலை செய்தது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.தனிப்படை போலீசார் பணம் வாங்கி கொடுத்த ராஜதுரையை நேற்று கைது செய்தனர். கொலையில் தொடர்புடைய கூலிப்படையைச் சேர்ந்த சிலரையும் பிடித்து விசாரித்து வருகின்றனர். வெளிநாட்டில் உள்ள அந்த நபர் யார், எதற்காக வெங்கடேைஷ கொலை செய்ய பணம் அனுப்பினார் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ