பாலாடையில் முருகன் ஓவியம் அசத்தும் மானாமதுரை ஓவியர்
மானாமதுரை : மானாமதுரையை சேர்ந்த ஓவியர் கார்த்தி 38, பாலாடையில் முருகன் உருவத்தை வரைந்து அசத்தியுள்ளார்.மானாமதுரை கன்னார் தெருவை சேர்ந்த இவர், சிறு வயது முதலே ஓவியத்தின் மீது ஏற்பட்ட ஈர்ப்பின் காரணமாக ஓவிய பயிற்சி பெற்று மாவட்ட, மாநில,தேசிய அளவில் போட்டிகளில் பங்கேற்று பரிசு, சான்றுகள் பெற்றார். தற்போது இவர் பழங்கள், இலைகள், பென்சில், மயிலிறகு உள்ளிட்ட நுணுக்கமான பொருட்களில் தேசிய தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், திரைப்பட நடிகர், நடிகைகள், சுவாமி படங்களை வரைந்து பாராட்டை பெற்று வருகிறார்.நேற்று புதிய முயற்சியாக பாலாடையில் கடவுள் முருகன் படத்தை தத்ரூபமாக வரைந்து பாராட்டுக்களை பெற்றுள்ளார்.இது குறித்து ஓவியர் கார்த்தி கூறியதாவது, நான் சிறுவயதிலேயே ஓவியத்தின் மீது ஏற்பட்ட காதலால் அதனை முறையாக கற்று இப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான மாணவர்களுக்கு இலவச பயிற்சி அளிக்கிறேன்.ஓவியத்தை வித்தியாசமான முறையில் கொண்டு செல்லும் வகையில் நுணுக்கமான பொருட்களில் வரைந்து வருகிறேன். நேற்று பாலாடையில் முருகன் படத்தை தத்ரூபமாக வரைந்துள்ளேன், என்றார்.