உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  சிங்கம்புணரியில் மஞ்சுவிரட்டு சலங்கை தயாரிப்பு

 சிங்கம்புணரியில் மஞ்சுவிரட்டு சலங்கை தயாரிப்பு

சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் காளைகளுக்காக தயாரிக்கப்படும் சலங்கைகளை வாங்க மஞ்சுவிரட்டு ஆர்வலர்கள் அதிகம் வரத்துவங்கியுள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் மஞ்சுவிரட்டின் போது காளைகளுக்கு அலங்கார சலங்கைகள் அணிவித்து அவிழ்ப்பது வழக்கம். இதற்காக பல்வேறு ஊர்களில் சலங்கைகள் தயாரிக்கப்படுகின்றன. சிங்கம்புணரியில் தயாரிக்கப்படும் சலங்கைகளுக்கு சுற்றுவட்டார மாவட்டங்களில் நல்ல கிராக்கி உள்ளது. இந்த சலங்கைகளை தலைமுறையாக சில குடும்பத்தினர் தயாரிக்கின்றனர். ஒருகாலத்தில் மஞ்சுவிரட்டுகளில் பிடிபடாத காளைகளுக்கு மட்டுமே சலங்கைகளை அணிவிப்பர். தற்போது அனைத்து மாடுகளுக்கும் சலங்கைகளை அணிவிப்பதை உரிமையாளர்கள் பெருமையாக நினைக்கின்றனர். இதனால் சலங்கை தொழில் விரிவடைந்துள்ளது. சலங்கையில் கட்டப்படும் நுால் குஞ்சங்களை தயாரிக்கும் பணியில் பெண்களும் ஈடுபடுகின்றனர். ஆனந்த், சலங்கைத் தொழிலாளி: 4வது தலைமுறையாக சலங்கை தயாரிக்கிறோம். ஆண்டு முழுவதும் தயாரித்தாலும் கார்த்திகை முதல் தை வரை மட்டுமே தொழில் பிஸியாக இருக்கும். 1800 முதல் 15,000 ரூபாய் வரை கட்சி, பல்வேறு அமைப்புகளுக்கு ஏற்ற வண்ணங்களில் தயாரித்து கொடுக்கிறோம். 4,6,8 அறுவை கொண்ட சாதா மணிகள், கும்பகோணம் மணிகள் உள்ளன. 100 ஆண்டுகளுக்கு முன்பு செட்டிநாட்டு வீடுகளில் அலங்காரத்திற்கு பயன்பட்ட அரியக்குடி மணிகளும் புழக்கத்தில் உள்ளன. ஒரு மணியின் விலை ஆயிரம் ரூபாய்.பழைய சலங்கைகளையும் புதுப்பித்து கொடுக்கிறோம், இந்தாண்டு முன்கூட்டியே ஆர்டர்கள் வரத்துவங்கியுள்ளது, என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ