திருப்புத்துாரில் அக்.14 மாரத்தான் போட்டி
திருப்புத்துார்: திருப்புத்துாரில் உடல் நலத்தை வலியுறுத்தி பள்ளி மாணவர்களுக்கான மாரத்தான் போட்டியை அக்.14 ல் ஆறுமுகநகர் லயன்ஸ் சங்கத்தினர் நடத்துகின்றனர். இதில் பள்ளி மாணவ, மாணவியர் பங்கு பெறலாம். காலை 6:30 மணிக்கு கோட்டையிருப்பில் துவங்கி நான்கரை கி.மீ.,துாரம் நடைபெறும். திருப்புத்தூர் காந்தி சிலையில் முடிவடையும் போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளன. பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் திட்ட ஒருங்கிணைப்பாளர் 94437 83577ல் பதிவு செய்து கொள்ளலாம்.