உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா

மாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா

காரைக்குடி: காரைக்குடி கணேசபுரம் மாரியம்மன் கோயில் பங்குனி விழாவை முன்னிட்டு பால்குடம், பூக்குழி இறங்கியும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.இக்கோயிலில் மார்ச் 29ம் தேதி பூச்சொரிதலுடன் பங்குனி விழா துவங்கியது. ஏப்., 6ல் கொடியேற்றம், காப்பு கட்டுதலுடன் தொடங்கி நடந்து வந்தது. நேற்று பக்தர்கள் முத்தாலம்மன் கோயிலில் இருந்து பால்குடம் எடுத்து ஆலங்குடியார் வீதி, பனந்தோப்பு வழியே கணேசபுரம் மாரியம்மன் கோயில் வந்தனர். கோயில் முன் பூக்குழி இறங்கியும் நேர்த்தி செலுத்தினர். நேற்று மாலை கரகம், முளைப்பாரி ஊர்வலத்துடன் விழா நிறைவு பெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ