உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மெக்கானிக் கொலை வழக்கு; இருவருக்கு ஆயுள்

மெக்கானிக் கொலை வழக்கு; இருவருக்கு ஆயுள்

சிவகங்கை: தேவகோட்டையில் கார் மெக்கானிக் செந்தில்முருகனை 39, வெட்டிக் கொலை செய்த வழக்கில் இருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து சிவகங்கை மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தேவகோட்டை பழைய சருகணி ரோட்டை சேர்ந்த கார் மெக்கானிக் செந்தில்முருகன் 39.இவருக்கும், தேவகோட்டை சேக்கப்பன் தெரு கொத்தனார் முருகனுக்கும் முன்விரோதம் இருந்தது.இதன் காரணமாக 2017 ஜூலை 28 அன்று சேக்கப்பன் தெருவில் வைத்து, முருகன் மற்றும் அவரது உறவினர் கார் டிரைவர் கண்ணதாசன் 45, சேர்ந்து செந்தில்முருகனை அரிவாளால் வெட்டிக்கொலை செய்தனர். தேவகோட்டை போலீசார் இருவரையும் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை சிவகங்கை மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடந்தது. இதில் இருவருக்கும் ஆயுள் தண்டனை, தலா ரூ.5000 அபராதம் விதித்து நீதிபதி சொர்ணம் ஜெ.நடராஜன் தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வழக்கறிஞர் அழகர்சாமி ஆஜரானார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை