மாநில சிலம்ப போட்டியில் பதக்கம்
மானாமதுரை: மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார் கோயிலில் நடைபெற்ற மாநில சிலம்ப போட்டிகளில் மானாமதுரை சீனி ஆசான் சிலம்ப பள்ளி மாணவர்கள் 17 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் ராஜேஷ் ஒற்றைக்கம்பு முறையில் வெள்ளி பதக்கம், இரட்டைக் கம்பு பிரிவில் மாணவர் ரித்திஷ் வெள்ளி பதக்கம், 14 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் மாணவர் தக்சித் ஒற்றைக்கம்பு பிரிவில் வெள்ளிப் பதக்கம், 17 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் மாணவி ரோஷினி இரட்டைக் கம்பு பிரிவில் வெற்றி பெற்றனர்.