உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மானாமதுரையில் மருத்துவ கழிவு  சுத்திகரிப்பு ஆலை பணி நிறுத்தம் 

மானாமதுரையில் மருத்துவ கழிவு  சுத்திகரிப்பு ஆலை பணி நிறுத்தம் 

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், மானாமதுரை சிப்காட் வளாகத்தில் மருத்துவ கழிவு சுத்திகரிப்பு ஆலை அமைப்பதற்கு எதிர்ப்பு எழுந்ததால் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.மானாமதுரை சிப்காட் வளாகத்தில் தனியார் நிறுவனம் மருத்துவ கழிவு சுத்திகரிப்பு ஆலை நிறுவுவதற்கான பணிகளை செய்து வருகிறது. இந்த ஆலையில் தமிழகம், கேரளா உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படும் மருத்துவ கழிவுகளை சுத்திகரிப்பு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரிய அனுமதியும் பெற்றுள்ளனர். இந்நிலையில் இந்த ஆலையால் அருகில் உள்ள சூரக்குளம் பில்லறுத்தான், செய்களத்துார், கல்குறிச்சி ஊராட்சிகள், மானாமதுரை நகராட்சி பகுதிகளில் நோய் தொற்று பரவும் எனக்கூறி அரசியல் கட்சியினர், விவசாய சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.கலெக்டரிடமும் பல முறை புகார் அளித்தனர். ஆலை துவங்கினால் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என அனைத்துக்கட்சி, விவசாய சங்கத்தினர் கடந்த வாரம் வருவாய் அலுவலர் செல்வசுரபியிடம் மனு அளித்தனர். கலெக்டர் ஆஷா அஜித் கூறியதாவது:மக்களிடம் எதிர்ப்பு கிளம்பியுள்ளதால் மருத்துவ கழிவு சுத்திகரிப்பு ஆலை கட்டுமான பணியை நிறுத்தி வைக்குமாறு உத்தரவிட்டுள்ளேன் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ