மன எண் கணிதம்: சாதித்த சிறுவன்
திருப்பாச்சேத்தி: திருப்பாச்சேத்தியைச் சேர்ந்த ஆறு வயது சிறுவன் செல்வகணேஷ் தேசிய மற்றும் சர்வதேச மன எண் கணித போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றார்.திருப்பாச்சேத்தி இசக்கிமுத்து - முத்து கணேஷ்வரி தம்பதி மகன் ஆறு வயது சிறுவன் செல்வகணேஷ், சென்னை தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். டிசம்பர் 14ம் தேதி டில்லியில் நடந்த சர்வதேச மன எண் கணித போட்டியில் பங்கேற்றார். 30 நாடுகளைச் சேர்ந்த ஆறாயிரம் பேர் பங்கேற்ற போட்டியில் தேசிய அளவில் முதலிடமும், விரைவு எண் கணித போட்டியில் சர்வதேச அளவில் இரண்டாம் இடமும் பிடித்து 200 டாலர் பரிசுத்தொகையை வென்று திருப்பாச்சேத்திக்கு பெருமை சேர்த்துள்ளார்.