மேலும் செய்திகள்
மாரியம்மன் கோவில்களில் ஆடி அமாவாசை வழிபாடு
25-Jul-2025
திருப்புத்துார்: திருப்புத்துார் புதுப்பட்டி மாவூடியூத்து காளியம்மன் கோயில் ஆடிசிறப்பு பால்குட விழா நடந்தது. இக்கோயிலில் ஆடி இரண்டாவது வெள்ளியில் விழா நடைபெறும். ஆடி 1 ல் ஆண்டிமுனீஸ்வரர் கோயிலில் காப்புக் கட்டி முகூர்த்தகால் ஊன்றப்பட்டு விழா துவங்கியது. நேற்றுமுன்தினம் இரவு சாமியாடிகள், கிராமத்தினர் நத்தம் கரந்தமலைக்குச் சென்று புனித நீர் எடுத்து வந்து மாவூடியூத்து காளியம்மன் கோயில் வந்தடைந்தனர். ஊர்வலமாக ஆண்டி முனீஸ்வரர் கோயிலுக்கு வந்தனர். அங்கு கும்மி ஆட்டம் நடந்தது. நேற்று காலை கோயிலில் சாமியாட்டத்தை தொடர்ந்து கரந்தமலை புனித நீர் குடம், பால்குடம், பூத்தட்டு, தீச்சட்டிகள் சுமந்து பக்தர்கள் ஊர்வலமாக வந்தனர். ஊர்வலத்தில் அரிவாளில் ஏறி சாமியாடிகள் அருள்வாக்கு கூறினர். அம்மனுக்கு பால்,பூக்களால் அபிேஷகம் நடந்தது. கரந்தமலை புனித நீர் சாமியாடிகளால் கோயில் குளத்தில் விடப்பட்டது.
25-Jul-2025