உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சிங்கம்புணரியில் பால்குட விழா

சிங்கம்புணரியில் பால்குட விழா

சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு பால்குட விழா நடந்தது. சந்திவீரன் கூடத்தில் இருந்து கிராமத்தார்கள் சார்பில் சேவுகப்பெருமாள் கோயிலுக்கு பால்குடம் எடுத்து வந்தனர். சுவாமி, அம்மன் மற்றும்பரிவார தேவதைகளுக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. மதியம் 3:00 மணிக்கு சிவாச்சாரியார்கள் பஞ்சாங்கம் படிக்கும் நிகழ்வு நடந்தது.வேங்கைப்பட்டி ரோட்டில் உள்ள அருள்தரும் ஐயப்பன் கோயிலில் விசு கனி அலங்காரம்செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. வேட்டையன்பட்டி காமாட்சி பரமேஸ்வரி அம்மனுக்கு கனி அலங்காரம் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை