உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / நோயாளிகளை அச்சுறுத்தும் குரங்குகள்

நோயாளிகளை அச்சுறுத்தும் குரங்குகள்

சிங்கம்புணரி: சிங்கம்புணரி அரசு மருத்துவமனையில் திரியும் குரங்குகள் நோயாளிகளை அச்சுறுத்தி வருகின்றன.இங்குள்ள தாலுகா தலைமை அரசு மருத்துவமனை வளாகத்தில் 50க்கும் மேற்பட்ட குரங்குகள் திரிகின்றன. பகல் நேரங்களில் சர்வ சாதாரணமாக வளாகத்தில் வலம் வருவதுடன் சில நேரங்களில் மருத்துவமனைக்குள்ளும் நுழைந்து நோயாளிகள், உடன் வருபவர்கள் வைத்திருக்கும் உணவு பொருட்களை பறிக்கிறது. அப்போது சிலர் தவறி விழுந்து காயம் அடையும் சூழ்நிலை உள்ளது. மருத்துவமனை ஊழியர்கள் குரங்குகள் உள்ளே வராதவாறு தீவிர கண்காணிப்பில் இருந்தாலும் அசறும் நேரங்களில் உள்ளே புகுந்து உணவு பொருட்களை எடுத்துச் சென்று விடுகின்றது. எனவே மருத்துவமனை வளாகத்தில் நோயாளிகள் பொது மக்களை அச்சுறுத்தும் வகையில் சுற்றித்திரியும் குரங்குகளை பிடித்து மலையில் விட வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை