மேலும் செய்திகள்
பெண் குழந்தைக்கான விருதுக்கு விண்ணப்பம்
26-Sep-2024
சிவகங்கை: தேசிய பெண் குழந்தை தினத்தை முன்னிட்டு, வீர தீர செயல் புரிந்த 18 வயதிற்கு உட்பட்ட பெண்களுக்கு விருது, பாராட்டு பத்திரம், ரூ.1 லட்சம் வழங்கப்படும் என கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.அவர் கூறியதாவது: 2025 ஜன., 24 தேசிய பெண் குழந்தை தினம். அன்றைய தினம் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தை தடுக்கவும், அனைத்து பெண் குழந்தைகளும் 18 வயது வரை கல்வி கற்பதை உறுதி செய்யவும், பெண் குழந்தை தொழிலாளர் முறையை ஒழித்தல், குழந்தை திருமணம் தடுக்க பாடுபட்டு, வீரதீர செயல் புரிந்த வயது 13 முதல் 18 க்குள் உள்ள பெண் குழந்தைகளுக்கு தேசிய பெண் குழந்தை தின விருது வழங்கப்படும்.இந்த விருதுடன் பாராட்டு பத்திரம், ரூ.1 லட்சம் பரிசு தொகை வழங்கப்படும். இந்த விருதை பெற தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட பெண் குழந்தைகள் https://award.tn.gov.inஎன்ற இணையதளத்தில் பதிவு செய்து, விண்ணப்பத்தை 2 நகல் எடுத்து சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள சமூக நலத்துறை அலுவலகத்தில் செப்., 30 அன்று மாலை 5:00 மணிக்குள் ஒப்படைக்க வேண்டும்.
26-Sep-2024