உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / தேசிய பயிற்சி பட்டறை

தேசிய பயிற்சி பட்டறை

காரைக்குடி: காரைக்குடி அரசு சட்டக் கல்லுாரியில் நடைமுறை சட்டங்களில் தற்போதைய நிலை மற்றும் மேம்பாடு குறித்த தேசிய பயிற்சி பட்டறை நடந்தது. பயிற்சி பட்டறையில் காரைக்குடி குற்றவியல் நடுவர் ஜெயப்பிரதா, காரைக்குடி வழக்கறிஞர் சங்கர், தேவகோட்டை குற்றவியல் நடுவர் மாரிமுத்து, வழக்கறிஞர் தீனதயாளன் பேசினர். சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சியில் சிவகங்கை மாவட்ட முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி அறிவொளி தலைமையேற்றார். சிவகங்கை தலைமை குற்றவியல் நடுவர் பசும்பொன் சண்முகையா பேசினார். சிவகங்கை மாவட்ட வழக்கறிஞர் சங்கத் தலைவர் ஜானகி ராமன் செயலாளர் சித்திரைச்சாமி, காரைக்குடி வழக்கறிஞர் சங்கத் தலைவர் ராமநாதன், செயலாளர் வேல்முருகன் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் முருகேசன் மற்றும் பேராசிரியர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !