உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / நாட்டு நலப்பணி திட்ட முகாம்

நாட்டு நலப்பணி திட்ட முகாம்

சிவகங்கை; பூவந்தி மதுரை சிவகாசி நாடார்கள் பயோனியர் மீனாட்சி பெண்கள் கல்லுாரி சார்பாக நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம் பூவந்தியில் நடந்தது.முன்னாள் ஊராட்சி தலைவர் விஜயா ஆறுமுகம், ஊராட்சி செயலாளர் ராஜ்குமார் தலைமை வகித்தனர். கல்லுாரி முதல்வர் விசுமதி பேசினார். முதல் நாளான நேற்று கிராமப்புற பெண்களுக்கு அணிகலன் தயாரிப்பு பயிற்சியை உதவி பேராசிரியர் அபிதா அளித்தார். முகாமில் மாணவிகள் கிராம பொதுமக்கள் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ