மானாமதுரை, இளையான்குடி கோயில்களில் நவராத்திரி விழா
மானாமதுரை: மானாமதுரை, இளையான்குடி கோயில்களில் நவராத்திரி விழா துவங்கியதை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். சிவகங்கை சமஸ்தானம், தேவஸ்தான நிர்வாகத்துக்குட்பட்ட மானாமதுரை ஆனந்தவல்லி சோமநாதர் கோயிலில் நவராத்திரி விழா நேற்று துவங்கியதை முன்னிட்டு கோயில் வளாகம் முழுவதும் மின்விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. அம்மன் சன்னதி உட்பிரகாரத்தில் கொலு அமைக்கப்பட்டிருந்தது. நேற்று ஆனந்தவல்லி அம்மன் ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் எழுந்தருளினார். அபிஷேக, ஆராதனை, பூஜை நடை பெற்றது. இளையான்குடி வாள் மேல் நடந்த அம்மன் கோயிலிலும் நவராத்திரி விழாவை முன்னிட்டு அம்மன் அலங்காரத்தில் கோயில் முன் மண்டபத்தில் எழுந்தருளினார்.