உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / குடிநீர், கழிப்பிடம், மின்விளக்கு வசதிகள் இல்லை

குடிநீர், கழிப்பிடம், மின்விளக்கு வசதிகள் இல்லை

தேவகோட்டை: உச்சநீதிமன்ற ஆலோசனை படி தேவகோட்டையில் நரிக்குறவர்கள் குடியிருப்பில் குறை கேட்பு முகாம் நடந்தது.சிவகங்கை மாவட்ட செஷன்ஸ் நீதிபதி அறிவொளி தலைமை வகித்தார். சட்ட பணிகள் குழு செயலாளர் ராதிகா முன்னிலை வகித்தார். முதுநிலை அலுவலர் மணிமேகலை வரவேற்றார். முகாமில் பங்கேற்ற நரிக்குறவ சமூகத்தினர் தங்கள் குழந்தைகள் படிக்க பள்ளி, அங்கன்வாடி மையம் இல்லை. ஆதார், ரேஷன் கார்டு, வாக்காளர் அட்டை இல்லை என்றனர். எந்த அலுவலக கோரிக்கைக்கு சென்றாலும் இந்த அட்டைகள் முக்கியம் என்கின்றனர். இது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக நீதிபதி தெரிவித்தார்.இங்கு 110 குடும்பம் வசிக்கும் இடத்தில் குடிநீர், கழிப்பிடம், தெருவிளக்கு வசதிகள் இல்லை என தெரிவித்தனர்.தேவகோட்டை சார்பு நீதிபதி கலைநிலா, நீதிபதி பிரேமி, மாவட்ட கல்வி அலுவலர் செந்தில்குமார், பி.டி.ஓ. பழனியம்மாள், வி.ஏ.ஓ., சந்திரசேகர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !