திருப்புவனத்தில் வட மஞ்சுவிரட்டு
திருப்புவனம்:திருப்புவனம் அருகே வடகரையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வட மஞ்சுவிரட்டு நடந்தது. மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், திண்டுக்கல், திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் மஞ்சுவிரட்டில் பங்கேற்க காளைகள் அழைத்து வரப்பட்டன. காலை ஒன்பது மணிக்கு தொடங்கிய போட்டிகள் மாலை வரை நடந்தன. போட்டியில் பங்கேற்ற காளைகளுக்கு வேட்டி, துண்டுகள், மாலை அணிவிக்கப்பட்டு உரிமையாளருக்கு குத்துவிளக்கு வழங்கப்பட்டது. 20 நிமிடத்தில் காளைகளை அடக்க வேண்டும் என்ற நிபந்தனைப்படி வீரர்கள் களமிறங்கினர். வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசு தொகை வழங்கினர். விழா கமிட்டியினர் ஏற்பாட்டை செய்திருந்தனர்.