உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / செவிலியர் மேம்பாட்டு சங்கநிர்வாகிகள் போராட்டம்   

செவிலியர் மேம்பாட்டு சங்கநிர்வாகிகள் போராட்டம்   

சிவகங்கை:செவிலியர்களை மறுபணி அமர்த்தும் அரசின் முடிவை கைவிடக்கோரி தமிழ்நாடு செவிலியர் மேம்பாட்டு சங்கத்தினர் கலெக்டர் ஆகாஷிடம் மனு அளித்தனர். சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன் இச்சங்க மாவட்ட தலைவர் கிறிஸ்டி பொன்மணி தலைமையில் செவிலியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். அரசு மருத்துவமனைகளில் உள்ள 17 அவசர கால மீட்பு மையத்திற்கு 292 செவிலியர்களை மறுபணி அமர்த்துவது மூலம் நியமிக்கும் அரசின் முடிவை கைவிட வேண்டும். இந்த மையங்களுக்கு புதிய பணியிடங்களை ஏற்படுத்த வேண்டும். நீண்ட காலமாக நிரந்தரம் கோரி காத்திருக்கும் 6,500 செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை அடங்கிய மனுவை கலெக்டர் ஆகாஷிடம் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ