உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்

 செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்

சிவகங்கை: தமிழ்நாடு செவிலி யர்கள் மேம்பாட்டு சங்கத்தினர் கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்ட தலைவர் கிறிஸ்டி பொன்மணி தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் வினோதினி தொடங்கி வைத்து பேசினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் மாவட்ட செயலாளர் ராதா கிருஷ்ணன் பேசினார். போராட்டத்தில் தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். எம்.ஆர்.பி., தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்ட செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப செவிலியர்களை நியமிக்க வேண்டும். சம வேலைக்கு சம ஊதியம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலி யுறுத்தப்பட்டது. மாவட்ட பொருளாளர் ரஞ்சிதா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !