உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சத்துணவு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம் 

சத்துணவு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம் 

சிவகங்கை: சத்துணவு மையங்களில் தொகுப்பூதியத்தில் 8997 சமையல் உதவியாளர் நியமனத்தை கண்டித்து சிவகங்கையில் அனைத்து ஒன்றியங்களிலும் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.சிவகங்கை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் ஒன்றிய தலைவர் ரமணி தலைமையில் அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் கண்ணதாசன், செயலாளர் ராதாகிருஷ்ணன், மாவட்ட சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதிய சங்க மாநில செயலாளர் பாண்டி, நிதி காப்பாளர் நடராஜன் ஆகியோர் பங்கேற்றனர். திருப்புவனத்தில் ஒன்றிய தலைவர் பாலகிருஷ்ணன், காளையார்கோவிலில் ஒன்றிய தலைவர் ராமானுஜம், கண்ணங்குடியில் ஒன்றிய தலைவர் ஜெயபாரதி, இளையான்குடியில் ஒன்றிய தலைவர் பூந்தேவி, சாக்கோட்டையில் ஒன்றிய தலைவர் ஜெயலட்சுமி, திருப்புத்துாரில் ஒன்றிய தலைவர் தமிழரசி, சிங்கம்புணரியில் ஒன்றிய தலைவர் சுமதி, எஸ்.புதுாரில் ஒன்றிய தலைவர் மலைச்சாமி,மானாமதுரையில் ஒன்றிய செயலாளர் பூமா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை