உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / ரயில்வே ஸ்டேஷனில் ரிசர்வேஷன் கவுன்டர் வைக்க அதிகாரிகள் முடிவு   

ரயில்வே ஸ்டேஷனில் ரிசர்வேஷன் கவுன்டர் வைக்க அதிகாரிகள் முடிவு   

சிவகங்கை; சிவகங்கை ரயில்வே ஸ்டேஷனுக்கு செல்லும் ரோடு சீரமைப்பு, ரிசர்வேஷன் கவுன்டர் தனியாக திறக்க தெற்கு ரயில்வே நிர்வாகம் மதுரை கோட்டம் சம்மதம் தெரிவித்துள்ளதாக பயணிகள் சங்கத்தினர் தெரிவித்தனர். சிவகங்கை ரயில்வே ஸ்டேஷனில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும். குறிப்பாக நகருக்குள் இருந்து ரயில்வே ஸ்டேஷன் வரும் இரண்டு ரோடுகளும் குண்டும் குழியுமாக, பயணிகள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே அந்த ரோட்டை புதுப்பித்து தர வேண்டும். தற்போது இந்த ரயில்வே ஸ்டேஷனில் ஒரே கவுன்டரில், முன்பதிவில்லா டிக்கெட், முன்பதிவு டிக்கெட் வழங்கப்படுகிறது. இதனால் உரிய நேரத்தில் முன்பதிவில்லா டிக்கெட் எடுத்து ரயில்களை பிடிக்க முடியாமல் பயணிகள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதை தவிர்க்க பழைய முறைப்படி இந்த ஸ்டேஷனில், தனியாக ரிசர்வேஷன் கவுன்டர் திறக்கப்பட வேண்டும் என பயணிகள் சங்கத்தினர் மதுரை கோட்ட ரயில்வே அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்துள்ளனர். பயணிகள் சங்க நிர்வாகிகள் கூறியதாவது: எங்கள் கோரிக்கையை ஏற்று, முதற்கட்டமாக கோட்ட பொறியியல் பிரிவு அதிகாரிகள், ரயில்வே ஸ்டேஷன் செல்லும் அனைத்து ரோடுகளையும் புதுப்பித்து தர டெண்டர் விட உள்ளதாக தெரிவித்தனர். வணிக பிரிவு மேலாளர் மீண்டும் அங்கு தனியாக ரிசர்வேஷன் கவுன்டர் அமைத்துதர நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர். இவ்விரு வசதிகளை முதற்கட்டமாக ரயில்வே நிர்வாகம் செய்தாலே அதிகளவில் பயணிகள் ரயிலில் பயணிக்க துவங்கி விடுவர், என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ