உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கச்சாத்தநல்லுார் உறை கிணறு பிரச்னை மக்களிடம் அதிகாரிகள் பேச்சு வார்த்தை

கச்சாத்தநல்லுார் உறை கிணறு பிரச்னை மக்களிடம் அதிகாரிகள் பேச்சு வார்த்தை

இளையான்குடி : இளையான்குடி பேரூராட்சிக்குட்பட்ட பகுதிக்கு புதிய குடிநீர் திட்டத்திற்காக இளையான்குடி அருகே கச்சாத்தநல்லூர் வைகை ஆற்று பகுதியில் 6 உறை கிணறுகள் அமைக்கப்பட்டு தண்ணீர் கொண்டு செல்ல ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. அப்பகுதி மக்கள் இங்கு உறை கிணறுகள் அமைத்தால் குடிநீர் மற்றும் விவசாயம் பாதிக்கப்படும் என போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 2 வாரங்களுக்கு முன்பு கோட்டாட்சியர் ஜெபி கிரேசியா பேச்சு வார்த்தை நடத்தி கிராம மக்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லாமல் உறை கிணறுகள் அமைக்கப்படும் என உறுதி அளித்தார். இதனைத் தொடர்ந்து சில நாட்களாக உறை கிணறுகள் அமைக்கும் பணிக்காக பணியாளர்கள் சென்ற போது கிராம மக்கள் மீண்டும் தொடர்ந்து போராட்டத்தில் நடத்தினர். நேற்று இளையான்குடி தாசில்தார் முருகன், பேரூராட்சி செயல் அலுவலர் அன்னலட்சுமி ஆகியோர் கிராம மக்களிடம் ஏற்கனவே கிணறு அமைக்க இருந்த இடத்திலிருந்து மக்களின் குடிநீர் மற்றும் விவசாய தேவைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் நீண்ட தொலைவில் அமைக்கப்பட உள்ளதாக தெரிவித்ததை தொடர்ந்து கிராம மக்கள் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை