உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கணவர் திட்டியதால் கிணற்றில் விழுந்த மூதாட்டி

கணவர் திட்டியதால் கிணற்றில் விழுந்த மூதாட்டி

காரைக்குடி: கண்டனுார் ஆஞ்சநேயர் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் சொக்கலிங்கம் 70. இவரது மனைவி சேதுக்கரசி 60. இவர் உடல்நிலை சரியில்லாமல் வீட்டில் துாங்கிக் கொண்டிருந்தார். நேற்று முன்தினம் இரவு வீட்டுக்கு வந்த சொக்கலிங்கம் வீட்டில் மின் விளக்கு ஏன் போடவில்லை என்று சத்தம் போட்டுள்ளார். சோகத்தில் இருந்த சேதுக்கரசி தனது வீட்டின் பின்னால் இருந்த கிணற்றில் குதித்தார். நீண்ட நேரம் ஆகியும் மனைவியை காணாமல் பல இடங்களிலும் தேடிய கணவர் கிணற்றுக்குள் பார்த்தார். தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இருந்து மூதாட்டியை மீட்டு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை