ஆம்னி பஸ் மோதி ஒருவர் பலி
தேவகோட்டை, : தேவகோட்டை அருகே வெளிமுத்தி ஆட்டோ டிரைவர் இளங்கோ 45. நேற்று முன்தினம் இரவு 7:30 மணிக்கு தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்றார். வெளிமுத்தி விலக்கு அருகே ராமேஸ்வரத்தில் இருந்து பெங்களூரூ நோக்கி சென்ற, ஆம்னி பஸ் இவர் மீது மோதியதில், சம்பவ இடத்திலேயே பலியாகினார். ஆம்னி பஸ் டிரைவர் தங்கவேலிடம் தேவகோட்டை தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.