உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / திறந்தவெளி அருங்காட்சியக பணி தொல்லியல் அதிகாரிகள் இத்தாலி பயணம்

திறந்தவெளி அருங்காட்சியக பணி தொல்லியல் அதிகாரிகள் இத்தாலி பயணம்

கீழடி:கீழடியில் திறந்தவெளி அருங்காட்சியக பணி நடந்து வரும் நிலையில் பொருட்களை காட்சிப்படுத்துவது குறித்து அறிய தமிழக தொல்லியல் துறை ஆணையர் சிவானந்தம், கீழடி அகழாய்வு தள இயக்குனர் ரமேஷ் இருவரும் இத்தாலி நாட்டிற்கு சென்றுள்ளனர்.கடந்த ஜனவரியில் 17 கோடியே 80 லட்ச ரூபாய் செலவில் 67 ஆயிரத்து 343 சதுர அடி பரப்பளவில் கீழடியில் திறந்த வெளி அருங்காட்சியகம் அமைய உள்ளது. தமிழக தொல்லியல் துறை அகழாய்வு நடத்திய நான்கு, ஐந்து, ஏழாம் கட்டங்களில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் திறந்த வெளி அருங்காட்சியகமாக மாற்றப்பட உள்ளது.தமிழகத்தில் இதுதான் முதல் திறந்த வெளி அருங்காட்சியகமாகும். அதற்குரிய தொழில்நுட்பங்களை அறியும் பொருட்டு தமிழக தொல்லியல் துறை ஆணையாளர் சிவானந்தம், கீழடி அகழாய்வு தள இயக்குனர் ரமேஷ் ஆகியோர் இத்தாலி சென்றுள்ளனர். இத்தாலி நாட்டில் கொலோசியம், ரோமான் மன்றம், போம்பை ஆகியநகரங்கள் முக்கிய தொல்லியல் தளங்கள் ஆகும்.இவற்றை நேரில் கண்டு அதன்படி கீழடியிலும் திறந்த வெளி அருங்காட்சியகம் அமைக்க உள்ளனர். இத்தாலியில் திறந்தவெளி அருங்காட்சியகம் அமைந்த தொழில் நுட்பம், பராமரிப்பு, பார்வையாளர்கள் அனுமதிப்பது உள்ளிட்ட அனைத்து விஷயங்களையும் அறிந்து கொள்ள ஒரு மாத பயணமாக சென்றுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !