புத்தாக்க வளர் மையம் திறப்பு
காரைக்குடி: காரைக்குடி அழகப்பா பல்கலையில் உயர் கல்வித் துறை சார்பில் ரூ. 2 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புத்தாக்க வளர் மைய கட்டட திறப்பு விழா நடந்தது. முதல்வர் ஸ்டாலின் காணொளி வாயிலாக திறந்து வைத்தார். அழகப்பா பல்கலை துணைவேந்தர் ரவி, மாங்குடி எம்.எல்.ஏ., பல்கலை பதிவாளர் செந்தில் ராஜன், தேர்வாணையர் ஜோதிபாசு, பல்கலை., அறிவியல் புல முதன்மை ஜெய காந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். காரைக்குடி அழகப்பா இன்ஜி., கல்லுாரியில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் தன்னாட்சி தேர்வு அறை புதிய கட்டட திறப்பு விழா நடந்தது. நிகழ்ச்சியில் முதல்வர் பாஸ்கரன், மாங்குடி எம்.எல்.ஏ., மற்றும் பேராசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.