தற்காலிக பஸ் ஸ்டாண்ட்க்கு எதிர்ப்பு
தேவகோட்டை: தேவகோட்டையில் தற்போதைய இடத்தில் கூடுதல் வசதிகளுடன் புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டப்பட உள்ளது. இதற்காக தற்காலிக பஸ் ஸ்டாண்ட் சிவன்கோயில் பகுதியில் அமைய உள்ளது. இதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். குடியிருப்பு பகுதியாக உள்ளது. நான்கு மாதத்தில்கந்த சஷ்டி விழா தொடங்க உள்ளது. இப்பகுதியில் தற்காலிக பஸ் ஸ்டாண்ட் அமைக்க கூடாது என கலெக்டர், நகராட்சி மண்டல இயக்குனரிடம்கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. கருதாவூரணியை சுற்றியுள்ள பகுதி, ஆற்றுபாலம் அருகே சருகணி ரோட்டில் நகராட்சிக்கு சொந்தமான இரண்டு இடங்கள், புறம்போக்கு இடங்கள் இருப்பதாக கூறி அங்கு அமைக்கலாம் என யோசனை கூறப்படுகிறது.