உடல் உறுப்பு தானம்
திருப்பாச்சேத்தி; திருப்பாச்சேத்தி அருகே மழவராயனேந்தலில் விபத்தில் உயிரிழந்த இளைஞரின் உடல் உறுப்பு தானமாக வழங்கப்பட்டதை அடுத்து இறுதி சடங்கில் அரசு மரியாதை அளிக்கப்பட்டது. மழவராயனேந்தலைச் சேர்ந்த பாஸ்கரன் மகன் சின்னமருது 24, சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் போது மாடியில் இருந்து தவறி விழுந்து காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார். அதே மருத்துவமனைக்கு அவரது சிறுநீரகம், கண்கள், இதயம் உள்ளிட்டவைகளை பெற்றோர் தானமாக வழங்கினர். நேற்று மழவராயனேந்தலில் நடந்த இறுதி சடங்கில் சிவகங்கை கோட்டாட்சியர் விஜயகுமார், தாசில்தார் கிருஷ்ணகுமார் உள்ளிட்டோர் அரசு சார்பில் அஞ்சலி செலுத்தினர்.