நம்ம சுவாமி, கோயிலை நாம் தான் பாதுகாக்க வேண்டும் எச்.ராஜா பேச்சு
சிவகங்கை: நம்ம சுவாமி, கோயிலை நாம்தான் பாதுகாக்க வேண்டும் என்று சிவகங்கையில் நடந்த விநாயகர் ஊர்வலத்தில் பா.ஜ., தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா பேசினார். அவர் பேசியதாவது: விநாயகர் சதுர்த்தி விழாவில் நாம் ஒரு 'தீம்' வைத்துள்ளோம். நம்ம சுவாமி, கோயிலை நாமேபாதுகாப்போம். இன்றைக்கு நம்கோயில்கள் நம்மிடம் இல்லை. தி.மு.க.,வின் கட்டுப்பாட்டில் உள்ளது. 40 ஆயிரம் ஹிந்து கோயில்களை சுவாமி இல்லை என்று கூறுகிற தி.மு.க., தன் கையில் வைத்து உள்ளது. கோயில்கள் அவர்களிடம் பாதுகாப்பாக இல்லை. அறநிலையத்துறை உண்டியல் பணத்தை மட்டுமே எடுத்து செல்கிறதே தவிறே முறையாக பராமரிப்பதில்லை. பூஜாரிக்கு கோவிலை பராமரிப்பதற்கு உரிய சம்பளம் கொடுப்பதில்லை. அமைச்சர் சேகர்பாபுதிருநீர் போட்டு ஏமாற்றுகிறார். தி.மு.க., அரசால் தமிழகத்தில் ஹிந்துக்கள் உயிருக்கு பாதுகாப்பு இல்லை. திருச்செந்துார் கோயில் கும்பாவிேஷக கட்டுமானப் பணியில் முறைகேடு நடந்துள்ளது. கான்கீரிட் தளங்கள் பெயர்ந்துள்ளது. 9500 கோயில்கள் கணக்கே கொடுக்கவில்லை என நீதிமன்றம் சொல்கிறது. கணக்கு காட்டாத அறநிலைத்துறைக்கு எதிராக ஹிந்துக்கள் வீதிக்கு வரவேண்டும். மதுரையில் முருக பக்தர்கள் மாநாட்டில் சேர்கள் உடையவில்லை. மிகவும் ஒழுக்கமாக நடந்தது. ஆனால் நான்கு நாட்களுக்கு முன்னால் நடந்த மாநாட்டில் 10 ஆயிரம் சேர்கள் உடைக்கப்பட்டன. தி.மு.க., நடத்திய முருகபக்தர்கள் மாநாடு மக்கள் காணிக்கையில் நடத்தப்பட்டது. அதற்கு கணக்குஇதுவரைக்கும் கொடுக்கவில்லை. அறநிலைத்துறை இருக்க கூடாது. 2026 மே மாதம் தி.மு.க., அரசு இருக்காது. 40 ஆயிரம் கோயிலின் பணத்தை கொள்ளை அடிக்கிறார்கள். அமெரிக்காவின் மிரட்டலுக்கு இந்தியா பயப்படாது. அமெரிக்காவிற்கு பாடம் புகட்ட வேண்டும். ஆன்லைனில் வர்த்தகம் செய்யமாட்டோம் உள்நாட்டு தயாரிப்புகளை பயன்படுத்துவோம் என்று உறுதி ஏற்றுகொள்ள வேண்டும் என்றார்.