மேலும் செய்திகள்
சிறுதானிய உணவு பொருள் விற்பனை அங்காடி திறப்பு
01-May-2025
காரைக்குடி: காரைக்குடியில் மாவட்ட மகளிர் திட்டத்திற்கு சொந்தமான பூமாலை வணிக வளாகம் செயல்படுகிறது. இங்கு மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடைகள் ஒதுக்கப்பட்டு, பயனடைந்து வருகின்றனர். மேலும் மகளிர் சுய உதவிக் குழுவினர், ராகி, கம்பு, பருப்பு , ஸ்னாக்ஸ் உள்ளிட்ட பல்வேறு உணவு பொருட்களை பேக்கிங் செய்து விற்பனை செய்து வருகின்றனர். பேக்கிங் செய்வதற்கு கூடுதல் செலவு ஏற்படுவதை தடுக்க தற்போது ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் மகளிர் திட்டம் சார்பில் பேக்கிங் மிஷின் வணிக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மகளிர் சுய உதவி குழுவினர் குறைவான செலவில் பேக்கிங் செய்ய முடியும். பேக்கிங் மிஷின் திறப்பு விழா நடந்தது. திட்ட இயக்குனர் கவிதப்பிரியா தொடங்கி வைத்தார். உதவி திட்ட இயக்குனர் ஐஸ்வர்யா, மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனை சங்கமேலாளர் ரூபன் ஆஸ்டின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
01-May-2025