உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / முருகன் கோயிலில் பால்குட விழா

முருகன் கோயிலில் பால்குட விழா

திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயில் முருகன் சன்னதியில் பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்தி செலுத்தினர். இக்கோயிலில் ஏப்.,8ம் தேதி சுப்பிரமணியர் சன்னதியில் காப்பு கட்டி பக்தர்கள் விரதத்தை துவக்கினர். தமிழ்ப் புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு நேற்று காலை 7:00 மணிக்கு கோட்டை கருப்பண்ண சுவாமி கோயிலில் சிறப்பு அபிேஷகம் நடந்தது. பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்தி செலுத்தினர். சந்தனக்காப்பு அலங்காரத்தில் முருகன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ