உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பங்கனபள்ளி மாம்பழம் கிலோ ரூ.120

பங்கனபள்ளி மாம்பழம் கிலோ ரூ.120

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் கோடை சீசனுக்கு முன்பே மாம்பழங்களின் விலை வெகுவாக குறைந்து வருகிறது.கோடையில் சேலம், நத்தம், மதுரை அழகர்கோவில், ராஜபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மாம்பழ விளைச்சல் துவங்கும். தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் விளையும் மாம்பழமும் சந்தைக்கு விற்பனைக்கு வருகிறது.அல்போன்சா, தோதாபுரி, பங்கனபள்ளி, நீலம், கேசர், செந்துாரா, மல்கோவா ஆகிய ரகங்களை சேர்ந்த மாம்பழங்கள் தற்போது சந்தைக்கு விற்பனைக்கு வருகின்றன. தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கிலோ ரூ.160க்கு விற்ற (பங்கனபள்ளி) மாம்பழம், தற்போது விலை குறைந்து வருகிறது. இன்னும் உள் மாவட்டங்களில் மாம்பழம் வரத்து இருந்தால், மேலும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. நேற்றைய சந்தையில் பங்கனபள்ளி மாம்பழ விலை கிலோ ரூ.120 க்கு குறைந்துவிட்டது. அதே போன்று கல்லாமை மாம்பழம் ரூ.100க்கு விற்கப்பட்டது.மாம்பழ வியாபாரி கூறியதாவது, மதுரை மாவட்டம் அழகர்கோவில், திண்டுக்கல் நத்தம் பகுதியில் மாம்பழம் வரத்து துவங்கிவிட்டது. பங்கனபள்ளி மாம்பழத்தை மக்கள் அதிகம் விரும்பி வாங்கி செல்கின்றனர். வரத்து அதிகரித்தால் இதன் விலை இன்னும் குறைய வாய்ப்புள்ளது, என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !