உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  அழகப்பா பல்கலையில் பாரா கிளைடிங் பயிற்சி

 அழகப்பா பல்கலையில் பாரா கிளைடிங் பயிற்சி

காரைக்குடி: காரைக்குடி அழகப்பா பல்கலை உடற்கல்வியியல் கல்லுாரியில், மாணவர்களுக்கு ஏர் அட்வெஞ்சர் பாரா கிளைடிங் பயிற்சி அளிக்கப்பட்டது. காரைக்குடி அழகப்பா பல்கலை என்.எஸ். எஸ்., அழகப்பா பல்கலை உடற்கல்வியியல் கல்லூரி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை சிவகங்கை மாவட்ட காலநிலை மாற்றப்பணி குழு சார்பில் ஏர் அட்வெஞ்சர் பாரா கிளைடிங் மற்றும் திறனாய்வு மேம்பாட்டு பயிற்சி நடந்தது. காலநிலை மாற்றம் ஏற்படுத்தும் அச்சுறுத்தல், சாகச விளையாட்டுகளின் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் பயிற்சி நடந்தது. அழகப்பா பல்கலை என்.எஸ்.எஸ்.,ஒருங்கிணைப்பாளர் நடராஜ் வரவேற்றார். அழகப்பா பல்கலை பதிவாளர் செந்தில் ராஜன் தலைமை வகித்து பேசினார். தேர்வாணையர் ஜோதிபாஸ், தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலை முன்னாள் துணைவேந்தர் சுந்தர் கலந்து கொண்டு பேசினர். என்.எஸ்.எஸ்.,அலுவலர் திவ்யா நன்றி கூறினார். 10 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள், உற்சாகமாக பயிற்சியில் ஈடுபட்டனர். முறையான பயிற்சி இல்லாமல் பல மாணவிகள் தரையிறங்க முடியாமல் கீழே விழுந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ