மேலும் செய்திகள்
பள்ளிகளில் கலைத்திருவிழா மகிழ்ச்சியில் மாணவர்கள்
27-Aug-2024
சிவகங்கை மாவட்டத்தில் அரசு துவக்கப்பள்ளி மாணவர்களுக்கு சரியான அளவில் சீருடைகள் வழங்கப்படவில்லை என பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர்.தற்போது அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சீருடைகள் வழங்கப்படுகின்றன. இதற்காக கடந்தாண்டே மாணவர்களின் அளவும் எடுக்கப்பட்டது. தற்போது துவக்கப்பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு சீருடைகள் வழங்கப்பட்டு வருகின்றன.வழக்கமாக கல்வி அலுவலர் அலுவலகம் மூலம் சீருடைகள் பள்ளிகளுக்கு வழங்கப்படும். இந்த முறை ஒப்பந்ததாரர்கள் மூலம் நேரிடையாக பள்ளிகளுக்கு சீருடைகள் வழங்கப்படுகின்றன.கடந்த ஆண்டே அளவு எடுத்து தைத்திருந்தாலும் கூட தற்போது கொடுக்கப்பட்டுள்ள சீருடைகள் மாணவர்களின் அளவிற்கேற்ப இல்லை. மாணவிகளுக்கு ஓரளவு பொருத்தமாக உள்ளது. ஒன்று முதல் ஐந்து வகுப்பு மாணவர்களுக்கு பொருந்தவில்லை. சட்டைகள் அளவை விட சிறிதாகவும், கால் சட்டை மிகப்பெரிதாக முழங்காலிற்கு கீழாக உள்ளதாகவும், இதனால் மாணவர்கள் அவற்றை அணியாமல் தவிர்ப்பதாகவும் பெற்றோரிடம் புகார்கள் எழுந்துள்ளன. எனவே கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து துவக்கப்பள்ளி மாணவர்களுக்கு பொருத்தமான அளவில் சீருடைகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர். -நமது நிருபர்-
27-Aug-2024