உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பயிற்சி டாக்டர்கள் போராட்டம் காத்திருந்த நோயாளிகள்

பயிற்சி டாக்டர்கள் போராட்டம் காத்திருந்த நோயாளிகள்

சிவகங்கை: சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் செப்., 29 அதிகாலை 1:00 மணிக்கு பயிற்சி டாக்டர்கள் கருணா, 23, சாதிக், 23, விஷ்ணு தினேஷ், 23, பணியில் இருந்தனர். அப்போது, சிவகங்கை நேரு பஜாரை சேர்ந்த பாலமுருகன், 26, என்பவரின் உறவினர்கள், பயிற்சி டாக்டர்களிடம் தகராறில் ஈடுபட்டு, பயிற்சி டாக்டர்களை தாக்கினர். டீன் சீனிவாசன் சிவகங்கை போலீசில் புகார் அளித்தார். தகராறில் ஈடுபட்ட அடையாளம் தெரியாத ஐந்து பேரில் சூர்யா, 27, என்பவரை போலீசார் கைது செய்தனர். அனைவரையும் கைது செய்ய வலியுறுத்தி, அக்., 5ல் பயிற்சி டாக்டர்கள் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அனைவரையும் கைது செய்வதாக போலீசார் உறுதி அளித்ததால் போராட்டத்தை கை விட்டனர். போலீசார் அளித்த உத்தரவாதம் நேற்றுடன் முடிவடைந்ததால், நேற்று காலை 8:00 மணி முதல் மீண்டும் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், புறநோயாளிகள் பி ரிவு, அவசர சிகிச்சை பிரிவு, மகப்பேறு பிரிவுகளில் சிகிச்சைக்கு வந்த பயனாளிகள் நீண்ட நேரம் காத்திருந்து சிகிச்சை பெற வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதற்கிடையே, பாலசுப்பிரமணியன், 39, என்பவரை போலீசார் கைது செய்தனர். எனினும், பிற மூவரையும் கைது செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பயிற்சி டாக்டர்கள் போராட்டம் நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ