மேலும் செய்திகள்
அபாய நீர்த்தேக்க தொட்டி இடித்து அகற்ற வேண்டுகோள்
20-Jun-2025
சிவகங்கை : சிவகங்கை ஊராட்சி ஒன்றியம் குமாரபட்டியில் குடிநீர் மேல்நிலை தொட்டிக்கு குடிநீர் எடுத்து செல்லும் மின்மோட்டார் பழுதானதால், 25 நாட்களாக மக்கள் தண்ணீர் தட்டுப்பாட்டில் தவிக்கின்றனர். சிவகங்கை ஊராட்சி ஒன்றியம், குமாரபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட குமாரபட்டி கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இம்மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய, இரண்டு இடங்களில் மேல்நிலை தொட்டி கட்டி குடிநீர் வினியோகம் செய்து வருகின்றனர். அதன்படி சேவை மையம் அருகே 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவுள்ள மேல்நிலை தொட்டிக்கு ஆழ்துழாய் கிணறு மூலம் குடிநீர் எடுத்து செல்கின்றனர். இதற்காக அங்கு 3 எச்.பி., பவர் உள்ள மோட்டார் பொருத்தியுள்ளனர். கடந்த 25 நாட்களுக்கும் மேலாக இந்த மின்மோட்டார் பழுதாகிவிட்டது. இதனால், 30 ஆயிரம் லிட்டர் மேல்நிலை தொட்டி மூலம் வீடு, பொது குழாய் இணைப்பு பெற்ற 150க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு குடிநீர் வினியோகமின்றி, கோடையில் கடும் குடிநீர் தட்டுப்பாட்டில் தவிக்கின்றனர். மேலும், இங்கு குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து 6,000 லிட்டர் தண்ணீரை குடம் ரூ.2 வீதம் வினியோகித்து வருகின்றனர். மின்மோட்டார் பழுதால் சுத்திகரிப்பு நிலையத்திற்கும் குடிநீர் எடுத்து செல்ல முடியவில்லை. இதனால், குமாரபட்டி கிராம மக்கள் அருகில் உள்ள மேல்நிலை தொட்டிகளில் குடிநீர் பிடிக்க 2 கி.மீ., துாரம் வரை நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பற்ற சூழலில் தண்ணீர் பிடிக்க செல்லும் பெண்களும் அச்சத்துடன் உள்ளனர். கிராம மக்கள் பல முறை ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் செய்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. விரைவில் இங்கு திருவிழா நடக்க உள்ள நிலையில் மக்களின் அடிப்படை தேவையான குடிநீர் பிரச்னை கூட தீர்க்கப்படவில்லை என புகார் தெரிவிக்கின்றனர். இது குறித்து சிவகங்கை ஊராட்சி ஒன்றிய பி.டி.ஓ.,(ஊராட்சிகள்) அருள்பிரகாசம் கூறியதாவது, குமாரபட்டியில் மின்மோட்டார் பழுது குறித்து, தற்போது தான் எனக்கு தகவல் கிடைத்தது. விரைவில் மின்மோட்டாரை சரி செய்து, தடையின்றி அக்கிராம மக்களுக்கு குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.
20-Jun-2025