மின்தடையால் மக்கள் குழப்பம்
தேவகோட்டை: மின் வழித்தடத்தில் பராமரிப்பு பணிக்காக மாதந்தோறும் மின் தடை செய்யப்படும். தேர்வு காரணமாக மூன்று மாதங்களாக மின் தடை செய்யப்படவில்லை. இரு தினங்களாக மீண்டும்மின் தடை உள்ளது. ஏற்கனவே துணை மின்நிலையம் வாரியாக மின்வழித்தடங்களில் உள்ள ஊர்களில் மின் தடை செய்யப்பட்டது.ஆனால் இரு தினங்களாக செய்யப்படும் மின்தடை மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. ஒரே பகுதியில் சில வீதிகளில் ஒரு நாளும் மற்ற வீதிகளில் வேறு ஒரு நாளிலும் மின்தடை செய்யப்படுகிறது. பள்ளிகள் திறப்பு நாளான நேற்று சான்றிதழ்நகல் எடுக்க மின்சாரம்இல்லாமல் மிகவும் அவதிப்பட்டனர்.