உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சிவகங்கையில் பெட்ரோல் குண்டு வீச்சு * குற்றவாளியை தேடும் போலீஸ்

சிவகங்கையில் பெட்ரோல் குண்டு வீச்சு * குற்றவாளியை தேடும் போலீஸ்

சிவகங்கை:சிவகங்கை மாவட்டம், நாலுகோட்டையில் மது அருந்திய பிரபுதேவா 26,வை தட்டி கேட்ட நாராயணன் 70, அவரது மனைவி தனலட்சுமியை அரிவாளால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்த பிரபுதேவா குறித்து போலீசில் புகார் செய்ததால், நாராயணன் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.சிவகங்கை அருகே நாலுகோட்டை ரேஷன் கடை அருகே பாலத்தில் அமர்ந்து அக்., 1 இரவு பிரபுதேவா மது அருந்தினார். இதை ரேஷன் கடைக்கு எதிரே வசிக்கும் நாராயணனின் மகன் ராஜா தட்டிக்கேட்டார். இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அங்கு சென்ற நாராயணன், பிரபுதேவாவை கண்டித்து அனுப்பி வைத்தார். இந்நிலையில் மீண்டும் அக்., 1 இரவு 10:30 மணிக்கு நாராயணன் வீட்டிற்கு வாளோடு பிரபுதேவா, நண்பர் வடிவேலுடன் சென்று நாராயணன் காலில் வெட்டினார். இதை தடுக்க வந்த நாராயணன் மனைவி தனலட்சுமி 65,யை தள்ளி விட்டு கொலை மிரட்டல் விடுத்தார். இருவரும் பலத்த காயத்துடன் சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். அக்., 1 இரவே நாராயணன் வீட்டிற்கு சென்ற பிரபுதேவா கையில் வைத்திருந்த இரண்டு பெட்ரோல் குண்டை வீசி விட்டு தப்பி சென்றார். சிவகங்கை தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை