உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / 10ம் கட்ட அகழாய்வு தொடக்கம்

10ம் கட்ட அகழாய்வு தொடக்கம்

கீழடி: கீழடியில் பத்தாம் கட்ட அகழாய்வு பணி மீண்டும் தொடங்கியுள்ளன.கீழடியில் பத்தாம் கட்ட அகழாய்வு கடந்தாண்டு ஜூன் 18ல் தொடங்கியது. நவம்பர் வரை ஒன்பது குழிகள் தோண்டப்பட்டு மீன் உருவ பானை ஓடுகள், தா என்ற தமிழி எழுத்து கொண்ட பானை ஓடு, சுடுமண் குழாய், பல்வேறு வித பானைகள், வண்ண பானைகள் உள்ளிட்டவை கண்டறியப்பட்டன. நவம்பரில் கீழடி அகழாய்வு தள இயக்குனர் ரமேஷ், இணை இயக்குனர் அஜய்குமார் உள்ளிட்ட இருவரும் ஸ்பெயின் நாட்டிற்கு பயிற்சிக்கு சென்றதால் அகழாய்வு நடைபெறவில்லை.அத்துடன் மழை தொடங்கியதால் அகழாய்வு குழிகள் அனைத்தும் தார்ப்பாயால் மூடி வைக்கப்பட்டது. மழை காலம் முடிவடைந்ததை தொடர்ந்து பத்தாம் கட்ட அகழாய்வு பணிகள் தற்போது மீண்டும் தொடங்கியுள்ளது. அகழாய்வு தளத்தை நேற்று பணியாளர்கள் சுத்தம் செய்தனர். இன்று முதல் மீண்டும் அகழாய்வு தொடங்க உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ