மேலும் செய்திகள்
மோசமான சாலையால் பரிதவிக்கும் மக்கள்
05-Oct-2024
எஸ்.புதுார்: எஸ்.புதுார் அருகே அமைக்கப்பட்ட சாலையில் மக்கள் பயணிக்க முடியாமல் பரிதவிக்கின்றனர்.இவ்வொன்றியத்தில் இரணிபட்டி கிராமத்திலிருந்து குளத்துப்பட்டி செல்லும் சாலை 8 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.76 லட்சம் செலவில் புதிதாக போடப்பட்டது. சாலை போடப்பட்ட 30 நாட்களில் தார், கற்கள் பெயர்ந்ததைத் தொடர்ந்து சுற்றுவட்டார கிராம மக்கள் அவதிக்கு உள்ளாகினர்.சாலையின் தரம் குறித்து அப்போதே மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் தெரிவிக்கப்பட்டது. ஆனால் சாலை சீரமைக்கப்படாமல் அப்படியே விடப்பட்டது. இந்நிலையில் இச்சாலையில் வாகனங்கள் செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் தவிக்கின்றனர். சாலை பழுதால் இரணிபட்டி, அம்மாபட்டி, பெருமாள்பட்டி, வடகாடு, பில்லாம்பட்டி, அரியாண்டி உள்ளிட்ட கிராம மக்கள் அவதிக்கு உள்ளாகின்றனர். எனவே இச்சாலையை உடனடியாக சீரமைக்க அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
05-Oct-2024