உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மானாமதுரையில் பிளம்ஸ் பழம் கிலோ ரூ.200க்கு விற்பனை

மானாமதுரையில் பிளம்ஸ் பழம் கிலோ ரூ.200க்கு விற்பனை

மானாமதுரை: மானாமதுரை வாரச்சந்தையில் பிளம்ஸ் பழங்கள் சீசன் துவங்கியதை அடுத்து ஒரு கிலோ ரூ.200 க்கு விற்கப்படுகிறது. மானாமதுரையில் வியாழன்று வாரச்சந்தை நடைபெற்று வருகிறது. மதுரை, திருப்புவனம், திருப்பாச்சேத்தி, சிவகங்கை, இளையான்குடி, பரமக்குடி உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து 300க்கும் மேற்பட்ட வியாபாரிகள் வருகை தந்து காய்கறிகள், பழங்கள், மளிகை, சாமான்கள், துணிகள், கருவாடு, மீன்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர்.மானாமதுரை மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் வருகை தந்து பொருட்களை வாங்கி செல்கின்றனர். ஜூலை மாத இறுதியில் ஆரம்பிக்கும் பிளம்ஸ் பழங்கள் சீசன் தற்போதே ஆரம்பிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து கொடைக்கானல், ஏற்காடு, உதகை உள்ளிட்ட ஊர்களில் விளையும் பிளம்ஸ் பழங்களை ஏராளமான வியாபாரிகள் விற்பனைக்காக கொண்டு வந்து ஒரு கிலோ ரூ. 200 க்கு விற்பனை செய்ததை ஏராளமான பொதுமக்கள் வாங்கி சென்றனர். மேலும் 3கிலோ தக்காளி ரூ.100-க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ ரூ.60க்கும், கத்தரி, வெண்டை,பூசணி ஆகியவை ஒரு கிலோ ரூ.40 க்கும், கடந்த வாரம் ஒரு கிலோ ரூ. 400க்கு விற்பனையான சின்ன பாகற்காய் சற்று விலை குறைந்து ரூ.320க்கும், பச்சை மொச்சை ரூ.50க்கும்,பட்டர்,சோயா பீன்ஸ் 200க்கும் விற்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி