உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  அஜித்குமார் மரணம்: போலீசார் ஜாமின் மனு தள்ளுபடி

 அஜித்குமார் மரணம்: போலீசார் ஜாமின் மனு தள்ளுபடி

மதுரை: சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலுக்கு மதுரை திருமங்கலம் பேராசிரியை நிகிதா காரில் வந்தார். காரிலிருந்த நகை திருடு போனது. அவர் திருப்புவனம் போலீசில் புகார் செய்தார். கோயில் காவலாளியாக இருந்த அஜித்குமாரை தனிப்படை போலீசார் தாக்கியதில் இறந்தார். வழக்கை சி.பி.ஐ.,யினர் விசாரிக்கின்றனர். இவ்வழக்கில் போலீஸ்காரர்கள் கண்ணன், பிரபு, ஆனந்த், ராஜா, சங்கரமணிகண்டன், போலீஸ் வேன் டிரைவர் ராமச்சந்திரன் கைது செய்யப்பட்டனர். விசாரணை மதுரை 5 வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடக்கிறது. அங்கு ராஜா, ஆனந்த், பிரபு ஜாமின் மனு தாக்கல் செய்தனர். நீதிபதி ஜோசப் ஜாய் விசாரித்தார். சி.பி.ஐ.,தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. நீதிபதி ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ