உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / 7 பேரால் பெண் பலாத்காரம் கும்பலை தேடும் போலீஸ்

7 பேரால் பெண் பலாத்காரம் கும்பலை தேடும் போலீஸ்

சிவகங்கை:சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே ஒரு கிராமத்தை சேர்ந்தவர், 30 வயது பெண். இந்த பெண்ணிற்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளன. இவர் அதே கிராமத்தை சேர்ந்த 24 வயது மதிக்கதக்க இளைஞருடன் அவரது ஊருக்கு அருகில் உள்ள காட்டு பகுதியில் பேசி கொண்டு இருந்தார். அங்கு வந்த இரண்டு இளைஞர்கள் அந்த இளைஞரை தாக்கி, பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தனர். பின், தன் நண்பர்கள் ஐந்து பேரை மொபைல் போன் வாயிலாக அழைத்தனர். அவர்களும் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தனர். காயமடைந்த, உடனிருந்த 24 வயது இளைஞர், சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். பாதிக்கப்பட்ட பெண்ணும் இளைஞரும் புகார் எதுவும் கொடுக்காததால் சம்பவம் குறித்து, மானாமதுரை போலீசார் ரகசியமாக விசாரிக்கின்றனர். பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 7 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி