உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கீழடியில் போலீஸ் பற்றாக்குறை திறக்கப்படாத புதிய கட்டடம்

கீழடியில் போலீஸ் பற்றாக்குறை திறக்கப்படாத புதிய கட்டடம்

கீழடி, : கீழடியில் 24 லட்ச ரூபாய் செலவில் காவல்துறை பயன்பாட்டிற்கு கட்டப்பட்ட கட்டடம் திறக்கப்படாமல் வீணாகி வருகிறது. கீழடியில் அருங்காட்சியகம் கட்டப்பட்டு 2023ல் திறக்கப்பட்டது. கீழடியில் பொதுமக்கள், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பிற்கு காவல் நிலையம் தேவை என்பதால் 2024ல் கனிம வள நிதியின் கீழ் 24 லட்சரூபாய் செலவில் செட்டி நாட்டு கட்டட கலை பாணியில் காவல் துறை பயன்பாட்டிற்கு அரசு தொடக்கப்பள்ளி எதிரே கட்டடம் கட்டி முடிக்கப்பட்டது. பணிகள் முடிந்து எட்டு மாதங்களுக்கு மேலாகியும் இன்று வரை திறக்கப்படவில்லை. போலீசார் கூறுகையில்: கீழடியில் புறக்காவல் நிலையம் அமைப்பது என்றால் தமிழக அரசு அறிவிக்க வேண்டும். ஒரு எஸ்.ஐ., தலைமையில் 12 போலீசார் நியமிக்க வேண்டும். போலீசார் பற்றாக்குறை உள்ளதால் இதுவரை தமிழக அரசு புறக்காவல் நிலையம் என அறிவிக்கவில்லை. புதிய கட்டடத்தில் லாக்கப் அறை, அதிகாரிகளுக்கு தனி அறை, பொதுமக்கள் வந்து செல்ல தனி அறை என சகல வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.தமிழக அரசு அறிவிக்காததால் தற்போது அது போலீசார் ஓய்வு எடுக்கும் விடுதியாக மட்டுமே செயல்படுத்த முடியும். சிவகங்கைக்கு ஜன.,22 ல் முதல்வர் வந்த போது புறக்காவல் நிலையம் அறிவிக்கப்படும் என எதிர்பார்த்தோம். ஆனால், அறிவிக்கவில்லை. தற்போது அருங்காட்சியக பாதுகாப்பிற்கு 2 போலீசார் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளனர்.அங்கும் பற்றாக்குறை உள்ளது. எனவே புதிய கட்டடத்தில் புறக்காவல் நிலையம் செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும், என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை