உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  கீழடியில் பள்ளி அருகேபோலீஸ் ஸ்டேஷன் திறப்பு

 கீழடியில் பள்ளி அருகேபோலீஸ் ஸ்டேஷன் திறப்பு

கீழடி: கீழடியில் நேற்று புதிய போலீஸ் ஸ்டேஷனை காணொளி காட்சி மூலம் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்க மாவட்ட எஸ்.பி., சிவபிரசாத் குத்து விளக்கேற்றினார். கீழடியை மையமாக வைத்து போலீஸ் ஸ்டேஷன் உருவாக்க வேண்டும் என மக் களின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று கடந்த மே மாதம் போலீஸ் மானிய கோரிக்கையின் போது புதிய போலீஸ் ஸ்டேஷன் உருவாக்கப்படும் என சட்டசபையில் அறிவிக்கப் பட்டது. அதன்படி கீழடி அரசு நடுநிலைப்பள்ளி எதிரே காவல்துறைக்கு சொந்த மான கட்டடத்தில் நேற்று புதிய போலீஸ் ஸ்டேஷனை முதல்வர் ஸ்டாலின் காணொளியில் திறந்து வைத்தார். கீழடியில் நடந்த விழாவில் மாவட்ட எஸ்.பி., சிவபிரசாத் குத்துவிளக்கேற்றினார். அதன்பின் கீழடி ஸ்டேஷன் எஸ்.ஐ., கலையரசு உள்ளிட்டோருக்கு சால்வை அணிவித்தார். கீழடியில் எஸ்.ஐ., தலைமையில் மூன்று பெண் போலீசார் உள்ளிட்ட பத்து போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். ஏ.டி.எஸ்.பி., உதயகுமார், மானாமதுரை டி.எஸ்.பி., பார்த்திபன், திருப்புவனம் இன்ஸ்பெக்டர் முத்துகுமார், கீழடி முன்னாள் ஊராட்சி தலைவர் வெங்கடசுப்ர மணியன் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ