உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / போலீஸ்காரர் டூவீலர் திருட்டு

போலீஸ்காரர் டூவீலர் திருட்டு

சிவகங்கை: சிவகங்கை ரயில்வே ஸ்டேஷன் பகுதியில் போலீசாரின் டூவீலரை திருடி சென்ற மர்மநபர் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.சிவகங்கை டவுன் போலீஸ் ஸ்டேஷனில் பணிபுரிபவர் சுரேஷ்குமார் 40. இவர் காரைக்குடியில் உள்ள காவலர் குடியிருப்பில் வசிக்கிறார். இவர் பணி முடித்து தனது டூவீலரை மார்ச் 28ஆம் தேதி ரயில்வே ஸ்டேஷன் எதிரே நிறுத்திவிட்டு காரைக்குடிக்கு ரயிலில் சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது இவரது டூவீலரை மர்ம நபர்கள் திருடி சென்றனர். போலீசார் விசாரிக்கின்றனர். கடந்த ஒரு மாதத்தில் மாவட்ட அளவில் 20க்கும் மேற்பட்ட டூவீலர்கள் திருடு போனது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !