உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / உணவுப்படியை எதிர்பார்க்கும் போலீசார்

உணவுப்படியை எதிர்பார்க்கும் போலீசார்

தேவகோட்டை: தமிழக முதல்வர் திருச்சி, திருநெல்வேலி வருகை, துணை முதல்வர் ராமநாதபுரம் வருகை என வரும்போது வெளி மாவட்டங்களுக்கு பாதுகாப்பு பணிக்காக சிவகங்கை போலீசார் அனுப்பப்படுகின்றனர்.இதே போல் பழநி உட்பட கோவில் திருவிழாக்களுக்கும் போலீசார் செல்கின்றனர். பிள்ளையார்பட்டி, குன்றக்குடி என பல ஊர்களுக்கும் தங்கள் பணி செய்யும் இடத்தில் இருந்து சம்பந்தப்பட்ட ஊர்களுக்கு பாதுகாப்புக்கு போலீசார் செல்கின்றனர். வெளிப்பணிக்கு செல்லும் போலீசாருக்கு போலீஸ் துறை சார்பில் உணவுப்படி பணம் வழங்கப்படும்.கடந்த இரண்டு மாதங்களாக சிவகங்கை மாவட்ட போலீசாருக்கு உணவு படி வழங்கவில்லை. திடீரென பாதுகாப்புக்கு செல்வதால் அவசரத்திற்கு கடன் வாங்கி செல்ல வேண்டிய நிலையில் உள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர். சிவகங்கை மாவட்ட போலீசாரின் உணவு படி நிலுவையை மாவட்ட நிர்வாகம் வழங்க வேண்டும் என போலீசார் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !