உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / தயாபுரம் முத்துமாரியம்மன் கோயிலில் பொங்கல் விழா

தயாபுரம் முத்துமாரியம்மன் கோயிலில் பொங்கல் விழா

மானாமதுரை: மானாமதுரை தயாபுரம் முத்துமாரியம்மன்கோயில் பங்குனி பொங்கல் விழாவில் நேற்று வைகை ஆற்றில்இருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் பால்குடம், அக்னிசட்டி எடுத்து பூக்குழி இறங்கி அம்மனை வழிபட்டனர்.இக்கோயிலில் மார்ச் 16ம் தேதி காப்பு கட்டுடன்பங்குனி திருவிழா தொடங்கியது. தினமும் காட்டு உடைகுளம், எம்.ஜி.ஆர்.நகர், கணபதி நகர், சிப்காட், ஆலங்குளம், தயா நகர் சார்பில் மண்டகப்படி நடந்தது. அம்மனுக்கு அபிேஷக ஆராதனைகள் நடந்தது. நேற்று பங்குனி பொங்கல் விழா நடைபெற்றதை முன்னிட்டு நூற்றுக்கணக்கான பக்தர்கள் கோயில் பூஜாரி சுப்பிரமணியன் தலைமையில் வைகை ஆற்றுக்கு சென்று பால்குடம், அக்னிசட்டி எடுத்து நகரின் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக வந்து கோயில் முன்பாக அமைத்திருந்த பூக்குழியில் இறங்கி நேர்த்தி செலுத்தினர். ஏற்பாடுகளை டிரஸ்டிகள் சுப்பிரமணியன், நாகராஜன், முருகன் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ