மேலும் செய்திகள்
குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
13-Dec-2025
சிவகங்கை: தபால் ஊழியர்களுக்கு இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் உட்பட 11 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி சிவகங்கை தபால் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. தபால் பி 3 சங்க செயலாளர் மாதவன் தலைமை வகித்தார். பி 4 சங்க செயலாளர் நடராஜன் முன்னிலை வகித்தார். செயலர் ரத்தினபாண்டியன், உதவி செயலர் நாகலிங்கம் பங்கேற்றனர். சம்பள மறுசீரமைப்பு விவகாரங்களை தீர்த்து வைக்க வேண்டும். அடிப்படை சம்பளத்துடன் 50 சதவீதம் இணைத்து, முதல் 20 சதவீதத்தை இடைக்கால நிவாரணமாக வழங்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உட்பட 11 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
13-Dec-2025